மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.176 கோடி தொழில் கடனுதவி வழங்கப்படும்

– அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டத்தில் கொரோனா சிறப்புக் கடனுதவி திட்டத்தில் ரூ.176 கோடி தொழில் கடனுதவி மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 100 சதவீத பணியாளர்களை ஈடுபடுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலம் பணிகளில் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.

மேலும், அனைத்து மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பில்லூர் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான நில எடுப்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதோடு அத்திக்கடவு – அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.