உலகக் கலைப் படைப்பாளி கருணாநிதி

தமிழ்நாட்டின் முன்னாள் மூத்த முதல்வரான டாக்டர். மு. கருணாநிதி அவர்கள் 1924-ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் சிறிய கிராமத்தில் முத்துவேல், அஞ்சுகம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.

இவர் சிறு வயதிலிருந்தே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதைத் தவிர பல்வேறு கவிதைகள் புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவரது தூக்கு மேடை நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா இவருக்கு “கலைஞர் “என்ற பட்டம் அளித்தார்.

இவர் எழுதிய பராசக்தி, மனோகரா, மருதநாட்டு இளவரசி, மந்திரகுமாரி போன்ற படங்கள் மிகவும் பிரபலம் பெற்றது. இவர் தன்னுடைய 14வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட தொடங்கினார். மேலும் இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவர்.

இவர் 1924 ஆம் ஆண்டு முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை வெளியிட்டார். 2009ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற பெப்சி மாநாட்டில் இவருக்கு “உலகக் கலைப் படைப்பாளி” என்ற விருது வழங்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டை தொடங்கி வைத்தவர். 2010 ஆம் ஆண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கியவர். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த முக்கிய மூத்த பிரமுகர்களுள் ஒருவராவார். “நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்” என்று மொழிந்த முத்தமிழ் அறிஞர், 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.