சங்கீத வித்வான் மைசூர் வாசுதேவாச்சாரியார்

சிறந்த சங்கீத வித்வானும், பல கீர்த்தனைகளை இயற்றியவருமான மைசூர் வாசுதேவாச்சாரியார் 1865 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார்.

இவரது இசைப் பயணம் 60 ஆண்டுகாலம் தொடர்ந்தது. பத்ம பூஷண், சங்கீத கலாநிதி விருது, மைசூர் ஆஸ்தான சங்கீத சாஸ்திர ரத்தினம், சங்கீத சாஸ்திர விஷாரத், சரஸகான சிரோன்மணி எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தலைசிறந்த கர்நாடக இசை நட்சத்திரமான மைசூர் வாசுதேவாச்சாரியார் 1961 ஆம் ஆண்டு மறைந்தார்.