ஒரு டீ சொல்லி கடை உரிமையாளர்களுக்கு உதவலாம்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தேநீர்க் கடை உரிமையாளர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும் முயற்சியில்,  தமிழ்நாட்டின் பிரபலமான தேயிலை பிராண்டான டாடா டீ சக்ரா கோல்ட் ஈடுபட்டு,  ‘ஒரு டீ சொல்லுங்க’ என்ற முன் முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தேநீர்க் கடைகளுக்கு இடைக்கால நிதிதிரட்டி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி.

இந்த முயற்சியின் மூலம்,  மக்கள் தங்கள் வீடுகளிருந்தே ஒரு தேநீர் கோப்பைக்கு உண்டான பணத்தை (ஒரு கோப்பைத் தேநீர் ரூ .10) வழங்கலாம். பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். அது தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேநீர் கடைகளுக்கு வழங்கப்படும். தனது பங்காக டாட்டா டீ சக்ரா கோல்டு நிறுவனம், 2 லட்சத்திற்கும் அதிகமான தேநீர் கோப்பைகளுக்கு உண்டான தொகையை நன்கொடையாக வழங்குகிறது.

நீங்கள் முன் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால்,  எந்தவொரு கட்டண செயலியில் இருந்தும், bharatpe.tea@iciciia  பதிவு செய்து அதில் ஒரு கோப்பை தேநீருக்கான கட்டணம் அல்லது நீங்கள் விரும்பும் பல கோப்பைகளுக்கான பணத்தைச் செலுத்தலாம். ஒவ்வொரு கோப்பை தேநீரின் மதிப்பு ரூ.10 ஆகும்.  மேலும் விவரங்களுக்கு https://oruteasollunga.bharatpe.com என்ற இணையதளத்தைக் காணலாம். விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும்.

உள்ளூர் நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள கோவிட் – 19  வழி காட்டுதல்களுக்கு இணங்க இந்த முன் முயற்சி பின்பற்றப்படுகிறது.