வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் மேங்கோ ஐஸ் கிரீம்!

எல்லோருக்கும் ஐஸ் கிரீம் என்றால் பிடிக்கும், அதிலும் மேங்கோ ஃபிளேவர் என்றால் பலருக்கும் விருப்பமானது. சுவை மட்டுமல்லாது, அதன் மணமும் நம்மை சுண்டி இழுக்கும். எனவேதான் பலருக்கும் மேங்கோ ஃபிளேவர் ஐஸ் கிரீம் மிகவும் பிடிக்கிறது. இதை நம் வீட்டிலேயே மேங்கோ ஐஸ் கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மேங்கோ ஐஸ் கிரீம் செய்ய தேவையான பொருட்கள்

தோல் நீக்கிய மாம்பழம் – ஒரு பவுல்

சர்க்கரை – 1 ஸ்பூன் ( தேவைப்பட்டால் )

தேன் – 1 ஸ்பூன்

செய்முறை

மாம்பழத்தை ஃபிரீசரில் கெட்டியாகும்படி 1 மணி நேரம் வையுங்கள்.

ஒரு மணி நேரம் கழித்து மிக்ஸி ஜாரில் போட்டு, தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அதை மைய அரையுங்கள்.

அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் போட்டு அதனை சுற்றி தேன் ஊற்றுங்கள். அவ்வளவுதான் மேங்கோ ஐஸ் கிரீம் தயார்