அ.தி.மு.க., சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள்

கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட  99வது டிவிஷன் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க., சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

அன்றாட தின கூலி தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற வருமானம் இல்லாமல் தவித்து வரும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு உதவும் படி தமிழக முதல்வர் உத்தரவு அளித்திருந்தார். அதன்படி  தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனையின் பேரில் கோவை கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போத்தனூர் 99 வது டிவிஷனுக்கு உட்பட்ட, போத்தனூர் மாதா பள்ளி மற்றும் ஸ்ரீ ராம் நகர் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு மற்றும் தானிய வகைகள் அடங்கிய பல்வேறு மளிகை நிவாரண பொருட்களை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் வழங்கினார். இதில் 99 வது வார்டு டிவிஷன் செயலாளர்கள் ரபீக், சுரா மற்றும் போத்தனூர் நண்பர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் மக்கள் அனைவரும் தனி மனித சமூக இடைவெளியைக் கடைபிடித்து மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.