பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் அம்மன் டிரஸ்ட்

க.க.சாவடி மாகாளி அம்மன் திருக்கோவில் நிர்வாக குழு மற்றும் அம்மன் டிரஸ்ட் சார்பில் சமூக அக்கறையுடன் பல பணிகளை மதுக்கரை வட்டாட்சியர் சரண்யாவின் அனுமதியுடன் செய்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 25ந் தேதி முதல் கோவை கந்தே கவுண்டன் சாவடி மாகாளி அம்மன் நிர்வாக குழு மற்றும் அம்மன் டிரஸ்ட் க.க.சாவடி சார்பில் தினசரி வறுமையில் வாடும் 175 முதியவர்களுக்கு வீடு தேடி சென்று சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட மதிய உணவு மற்றும் முட்டை வழங்கி வருகிறது.

மேலும், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, தினசரி   தேவைப்படும் மருந்துகள் டிரஸ்ட் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் 260 குடும்பங்களுக்கு 11 வகை காய் கறிகள் க.க.சாவடி பகுதியில் வீடு தேடி சென்று வழங்கப்பட்டது. 5 கிலோ அரிசி 400 குடும்பங்களுக்கும், அப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 3600 முட்டைகள் வழங்கப்பட்டது. 500 பேருக்கு கபசுர குடிநீர் வீடு தேடி வழங்கப்பட்டது.

இந்த பணி மே 14ம் தேதி ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்று அம்மன் டிரஸ்ட் நிர்வாகிகளான எஸ்.மோகன் குமார், கே.சண்முகசுந்தரம், பி.செந்தில்குமார், வே.விஸ்வநாதன், சி.அய்யாசாமி, எஸ்.ராசு ஆகியோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.