தேசிய அளவில் இரண்டாவது இடம் வென்ற பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி

நம் நாட்டின் பிரபலமான பத்திரிகைகளில் ஒன்றான ‘டேட்டா க்விஸ்ட்’ மாத இதழின் 15 ஆவது ஆண்டின் பதிப்பையொட்டி ‘டேட்டா க்விஸ்ட் டி-ஸ்கூல் சர்வே 2020’ நடத்தப்பட்டது. இதன்படி நாட்டிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, கல்வித் தரம், வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகளுடன் இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் ‘டேட்டா க்விஸ்ட்’ மாத இதழில் மார்ச் வெளியிடப்பட்டது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மூன்று பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

தேசிய அளவில் (National level) ‘சிறந்த முதல் 10 தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகள் தரவரிசையில்’ இரண்டாம் இடமும், அதேபோல், தென்பிராந்திய அளவில் (South zone) ‘முதல் 10 தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்’ (டாப் 10 ப்ரைவேட் டி – ஸ்கூல்ஸ்) தரவரிசைப் பட்டியலில் 2 ஆவது இடமும் வென்று சாதனை படைத்துள்ளது.

அத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் (Top 100 T-Schools) தரவரிசைப் பட்டியலில் பண்ணாரி அம்மன் கல்லூரி 5 ஆம் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அங்கீகாரம், மாணவர்களிடையே பொறியியல் கல்வித்தரத்தை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு அனுதினமும் தொய்வின்றி இயங்கிவரும் இக்கல்லூரியை மேலும் பல சாதனைகளை நிகழ்த்த அடித்தளமாக அமையும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.