அரசு மருத்துவமனைக்கு 10 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்பாட்டுக்கென கோவை அரசு மருத்துவமனைக்கு பத்து இலட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்களை கோவை மாவட்ட அரிமா சங்கத்தினர் வழங்கியுள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் சார்பாக கொரோனா தொற்றை கட்டுபடுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா நோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்பாட்டுக்கென அரசு மருத்துவமனைக்கு, மாவட்ட அரிமா சங்கம் 324 B1 சார்பாக 10 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சஜீடேவிட் மண்டலத் தலைவர்கள் காளியப்பன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில், வழங்கப்பட்ட இதில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பயன்படுத்தும் கவச உடைகள், முக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினி திரவம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனை டீனிடம் வழங்கப்பட்ட இதில் நேரு நகர் அரிமா சங்க செயலாளர் அரிமா செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.