மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் சித்திரைத் திருவிழாவை ‘ஹிஸ்டரி டிவி18’ ல் காணலாம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் சித்திரைத் திருவிழா பற்றிய குறும்படத்தை – தமிழில், மே 4 அன்று ஒளிபரப்புகிறது, ‘ஹிஸ்டரி டிவி18’ தொலைக்காட்சி! 

வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பாகக் கண்டு களிக்கலாம்!

இந்தியாவிற்கான மூலமுதலான தயாரிப்புகளில் (new original production) மேலும் ஒன்றாக ஹிஸ்டரி டிவி18 (HistoryTV18) ‘மீனாட்சி அம்மன் மற்றும் தி மார்வெல் ஆஃப் மதுரை’ (Meenakshi Amman & The Marvel of Madurai) நிகழ்ச்சியை மே 4, திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு முதன்முதலில் தமிழில் ஒளிபரப்புகிறது. இதுவரை சந்தித்திராத சவாலை உலகம் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், ஹிஸ்டரி டிவி18 வீட்டிலிருக்கும் சின்னத்திரைகளுக்கு சித்திரைத் திருவிழாவையும் புகழ்வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவிலையும் கொண்டுவந்து மெய்சிலிர்க்கும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி திருக்கல்யாண நாளன்று முதன்முதலாக ஒளிபரப்பாகிறது.

2019-இல் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் பழங்கால நகரமான மதுரையின் தாய்க்கடவுள், அரசி, மற்றும் காக்கும் கடவுளான மீனாட்சி அம்மனின் பழங்கதையை பெருமையுடன் கொண்டாடுகிறது. இப்படம், தமிழ்நாட்டின் மதுரையில் நடக்கும் இவ்விழாவின் முதல் இரண்டு வாரக் கொண்டாட்டங்களையும், முக்கிய நிகழ்வுகளுக்கான பின்வேலைகளையும், அதனுடன் நடக்கும் உண்மைக் கதைகளையும், அவற்றின் சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவங்களையும் பார்வையாளர்களுக்கு காட்டுகிறது. இப்படம், சித்திரைத் திருவிழாவின் இதுவரை காணாத காட்சிகளை வழங்கி, அதன் வரலாற்றைத் தேடி, அதிசய உண்மைகளை வெளிக்கொணர்ந்து, வியப்பிலாழ்த்தும் நாட்டுப்புற கதைகளுக்குள்ளும் நம்மை கொண்டு செல்கிறது.
இதன் கதைக்கூற்று, அம்மனுடனும், அம்மனின் கோவிலுடனும், ஆண்டாண்டு நடக்கும் இதன் முக்கியமான விழாவுடனும் பின்னிப்பிணைந்துள்ள மக்களின் கதைகளைச் சார்ந்து உள்ளது.

மதுரையின் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவத்தையும், இதன் ஆரம்ப தோற்றம், விரிவாக்கம் மற்றும் இன்றைய அமைப்பு போன்றவற்றையும் இப்படம் ஆராய்கிறது. 14 ஏக்கர் பரந்துள்ள இந்த கோவில் வளாகத்தின் கலை மற்றும் கட்டடவியல் அற்புதங்களை ஹய்-டெஃபனிஷன் (Hi-Definition) மற்றும் 4-கே (4K) மாடல் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, வல்லுனர்கள், கோவில் அதிகாரிகளின் கருத்துக்களையும், விளக்கங்களையும் எடுத்து வைக்கிறது.

ஒரு வருடம் எடுத்துக்கொண்ட இந்த மூலமுதலான தயாரிப்பு, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான ‘பட்டாபிஷேகம்’, ‘திருக்கல்யாணம்’, மற்றும் ‘தேரோட்டம்’ ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மதுரையின் வைகை ஆற்றில் லட்சக்கணக்கான மக்கள் கூடும், விஷ்ணு பெருமானுக்கு பெருமை சேர்க்கும் கள்ளழகர் விழாவும் இதில் இடம்பெறுகிறது. கண்ணைக் கவரும் காட்சியாக மட்டுமின்றி இவ்விழா சமூக-அரசியல் ரீதியாகவும்  வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது.

தெய்வீக பெண் சக்தியின் மூலமாக விளங்கும் அம்மனின் அருள்தரும் ஒளியும், மக்களின் அன்பும் நம்பிக்கையும், வண்ணமயமான பிரம்மாண்டமான திருவிழாவும் மீண்டும் மீண்டும் காணத்தூண்டும். HistoryTV18 இன் உயரிய தயாரிப்பு மதிப்பும், விருதுகளை வெல்லும் மூலமுதலான தயாரிப்புகளின் தன்மையும் இந்நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்றாக ஆக்குகிறது.

ஏ+இ நெட்ஒர்க்ஸ் டி.வி.18 (A+E Networks | TV18) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நெட்ஒர்க்18 (Network18) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவினாஷ் கெளல் (Avinash Kaul) இந்த ஆவணப்படம் குறித்து பேசும்போது, “ஹிஸ்டரி டிவி18-ல் நாங்கள், பிரமிக்கவைக்கும் காட்சியமைப்புகள் கொண்ட, எங்கள் பார்வையாளர்களுக்கு பொருத்தமான புதிய வரையறையை வகுக்கும் கதை படைப்புகளை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். நம்மை ஈர்க்கும், மகிழவைக்கும், கற்பிக்கும் இந்தியாவின் கலாச்சார வரலாற்றை காட்டும் வியக்கவைக்கும் ஆவணப்படங்களின்  வரிசையில் ‘மீனாட்சி அம்மன் மற்றும் தி மார்வெல் ஆஃப் மதுரை’ ஒரு புதிய வரவு. இது வெறும் காணத்தூண்டும் படைப்பு மட்டுமல்ல, நமது நாட்டின் வேற்றுமையைக் கொண்டாடும் படைப்பும் கூட. இன்றைய சூழலில்  இந்நிகழ்ச்சி, எங்களின் சேனலின் வழியாக இந்தக் கொண்டாட்டத்தில் அனைவரும் பங்குகொள்ள வழி வகுத்துள்ளது” என்று கூறினார்.

‘மீனாட்சி அம்மன் மற்றும் தி மார்வெல் ஆஃப் மதுரை’, முதல் ஒளிபரப்பு மே 4, திங்கட்கிழமை, இரவு 8 மணிக்கு, ஹிஸ்டரி டிவி18-ல், தமிழில் காணத் தவறாதீர்கள்!

Link for Show Promo: https://youtu.be/4Z4qURj07Jw