20,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பொங்கலூர் பழனிச்சாமி

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர்.நா. பழனிச்சாமி, மத்திய அரசு அறிவித்த கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைத் தடுக்க அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக பாதிக்கப்பட்ட சூலூர் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் ஒன்றியம், சுல்தான் பேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வாழும் அனைத்து அருந்ததியர் காலணி மற்றும் 20,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

இத்தொகுப்பில் ஒரு குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோவிற்கு மேற்பட்ட மளிகை சாமான்கள் உடன் காய்கறிகளும் வழங்கினார். இன்று செவ்வாய்க்கிழமை (28.04.2020) காலை 10 மணி அளவில் சூலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணம்பாளையம், பள்ளபாளையம், மற்றும் பீடம்பள்ளி பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், இந்தப் பணி இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும்.