அனிதா குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

நீட் விவகாரத்தில் போராடி, தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவிற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் அனிதாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அனிதா இறந்த அன்றே, நடிகர் ஜிவி பிரகாஷ் குமார், அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் நடிகர் விஜய் இன்று(செப்., 11) அனிதாவின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அனிதாவின் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார்.