கோவை கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாராதொழிலாளர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை மனு

தமிழக முதலமைச்சருக்கான கோவை மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாராதொழிலாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 21 தேதியில் நடைபெற்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமைப்புசாரதொழிலாளர்கள் நலன் குறித்து பல்வேறு தீரமாணங்கள் இயற்றப்பட்டு கோரிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.
இது குறி்த்து இவர்கள் வழங்கிய செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் அமைப்புசாராதொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட நலவாரியங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து, புதுப்பிக்கப்படாத தொழிலாளர்களின் குடும்பநலன் கருதி அவர்களுக்கும் முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணநிதி கிடைக்கதக்க உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டும் என்றும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட சமூகநல அலுவலரின் முன்பாக பதிவு செய்து நிலுவையில் உள்ள அமைப்புசாரதொழிலாளர்கள், பதிவை புதிப்பிக்க விண்ணப்பம் செய்து நிலுவையில் உள்ள அமைப்புசாராதொழிலாளர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பென்சன், கல்வி, திருமணம், பிரசவம், மூக்குகண்ணாடி மற்றும் விபத்து உதவித்தொகை உள்ளிட்ட நிவாரணம் கோரி சமர்பிக்கப்பட்ட தொழிலாளர்களின் விபரங்களை மாவட்ட வாரியாக பெற்று அவர்களுக்கும் முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத்தொகை கிடைத்திட உடனடியாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப் படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீர்மானங்கள் ATP-G.முருகேசன், LPF-வே.கிருஷ்ணசாமி, AITUC-N.செல்வராஜ், INTUC- D.சிரஞ்சிவிக்கண்ணன், HMS-G.மனோகரன், CITU-பழனிச்சாமி, BMS-P.முருகேசன் மற்றும் அனைத்து கட்டுமான அமைப்புச்சாரதொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டு குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.