அம்மா சேவா அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

அம்மா சேவா அறக்கட்டளை சார்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்த கொரோனா காலகட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை குறி்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது குறித்து இதன் நிர்வாக அறங்காவலர் மற்றும் அதிமுக கழக உறுப்பினர் சோனாலி பிரதீப் பேசுகையில், சமுதாயத்தில் கொரோனா பரவாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கையில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது. இவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, இதிலிருந்து தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாக்க என்ன மாதிரியான ஊட்ட சத்து உணவுகள், பாதுகாப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை, பிஸ்கெட் பாக்கெட் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டது. இதுபோக அவர்களுக்கு மீண்டும் பயன்படுத்த கூடிய முக்கவசம் வழங்கப்பட்டு அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இவருடன் இதன் அறங்காவலர் பிரதீப் மற்றும் வார்டு கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.