1000 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக தோழர்கள் உதவிட வேண்டும் என கழகத் தலைவர் ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின், பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட எஸ்.வி.நகர், அம்பேத்கர் நகர், கஸ்தூரிநாயக்கன்பாளையம், கொண்டசாமி நகர், கணேச நகர், சஞ்சீவி நகர், கணுவாய் – காமராஜ் நகர், அண்ணா நகர், ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை 1000 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு சரவணம்பட்டி பகுதி கழக பொறுப்பாளர் பையாக்கவுண்டர்.

இதில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய கழக பொறுப்பாளர் அறிவரசு, அவைத் தலைவர் து.க.முத்து, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஊராட்சி செயலாளர் மூர்த்தி, ஜெயக்குமார், கோபால்சாமி, மோகன்ராஜ்,  இராமச்சந்திரன், ஐடி விங் மதன்குமார் மற்றும் கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.