‘ரீசார்ஜ்ஃபார்குட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது வோடஃபோன் ஐடியா

வோடஃபோன் ஐடியா, தற்போதுள்ள சூழ்நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையில் நம்முடன் தகவல் தொடர்பில் இல்லாதவர்களை நம்முடன் இணைப்பில் இருக்க உதவும் ப்ரத்யேக சேவையாக ‘ரீசார்ஜ்ஃபார்குட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய திட்டம், வோடஃபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள்,  ஆன்லைன் மூலமாக ரீசார்ஜ் செய்வது எப்படி என தெரியாத அல்லது இணைய வசதியைப் பெறும் வாய்ப்புகள் இல்லாத, தங்களது நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது வேறு யாராக இருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக ரீசார்ஜ் செய்யும் வசதியை அளிக்கிறது. மேலும் இந்த நல்லெண்ண அடிப்படையிலான சேவையானது, வோடஃபோன் அல்லது ஐடியா சேவைகளைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் ‘மைவோடஃபோன்’ செயலி அல்லது  ‘மைஐடியா’ செயலி  மூலம் வேறு யாருக்கேனும் ரீசார்ஜ் செய்யும் போது, அவர்கள் ரீசார்ஜ் செய்யும் கட்டணத்தின் மதிப்பில் 6 சதம் வரை கேஷ்பேக் சலுகையாக வழங்குகிறது.

புதிய ரீசார்ஜ்ஃபார்குட் திட்டத்தைப் பற்றி வோடஃபோன் ஐடியாவின் சந்தைப்படுத்தல் பிரிவின் இயக்குனர் அவ்னீஷ் கோஸ்லா கூறுகையில், “தற்போது நிலவும் இக்கட்டான நிலைமையானது அதிக எண்ணிக்கையிலான எங்களது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை பெருமளவில் பாதித்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு கூட வெளியே செல்ல இயலாத சூழ்நிலையிலும், டிஜிட்டல் முறையில் ரீசார்ஜ் செய்வதற்கு தேவையான இணைய வசதியைப் பெறும் வாய்ப்பில்லாமலும் இருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் மீது அக்கறை கொண்டுள்ள ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமாக, இந்த எதிர்பாராத இக்கட்டான காலக்கட்டங்களில் கூட எங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்கு தடையில்லாத, வலுவான இணைப்பை உறுதிப்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இதையடுத்து #ரீசார்ஜ்ஃபார்குட் என்ற ப்ரத்யேகமான திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இத்திட்டமானது, தற்போது நிலவும் சவாலான சூழ்நிலையில் தங்களது ப்ரீபெய்ட்டுக்கு ரீசார்ஜ் செய்ய இயலாத, ரீசார்ஜ் செய்வதில் சிரமமுள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்வதை சாத்தியப்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் வோடஃபோன் மற்றும் ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்களது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது உதவி தேவைப்படுவர்களுக்காக  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட #ரீசார்ஜ்ஃபார்குட்-ஐ மேற்கொள்வதன் மூலம் நல்லெண்ண உதவிகளை அளிக்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்றார்.

வோடஃபோன் ஐடியா #ரீசார்ஜ்ஃபார்குட் எப்படி  வேலை செய்கிறது ? வோடஃபோன் மற்றும் ஐடியா சேவைகளைப் பயன்படுத்தி வரும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், மை வோடஃபோன் செயலி அல்லது மை ஐடியா செயலிக்குள் செல்ல லாக் இன் செய்து, வேறு யாராவது ஒரு வோடஃபோன் ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்கு ரீசார்ஜ்  செய்யவேண்டும். ரீசார்ஜ் செய்த பிறகு, அந்த வாடிக்கையாளருக்கு ரீசார்ஜ் செய்த மதிப்பிற்கு ஏற்ற கேஷ்பேக் சலுகை வழங்கப்படும். கேஷ் பேக் கூப்பனை அந்த வாடிக்கையாளர் தனது அடுத்து ரீசார்ஜின் போது பயன்படுத்தலாம்.

குறிப்பு – கேஷ் பேக் சலுகையானது, மை வோடஃபோன் செயலி அல்லது மை ஐடியா செயலி மூலமாக  மேற்கொள்ளப்பட்டும் ரீசார்ஜ்களுக்கும் மட்டுமே பொருந்தும். #ரீசார்ஜ்ஃபார்குட் சலுகை 9-ம் தேதி ஏப்ரல் 2020 முதல் இச்சலுகை வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கும், 10-ம் தேதி ஏப்ரல் 2020 முதல் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது. மேலும் இச்சலுகை 30-ம் தேதி ஏப்ரல் 2020 வரை மட்டுமே பொருந்தும்.

வாடிக்கையாளர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள தேவையிருக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கான பயன்பாட்டு வாய்ப்பு வசதிகளை அளிப்பதற்கு வோடஃபோன் ஐடியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகளில்  இது மற்றுமொரு முயற்சியாகும்.