கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு பணி

கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலவர் அசோகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டர்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் பிளீச்சிங் தெளித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டார்கள்.

பின்னர் ஆரசு மருத்துவமனை எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள், தனியார் வாகனகளில் மாநகராட்சி பணியாளர்களால் கிருமி நாசினி தெளித்து துமைப்படுத்தும் பணிகள் நடைபெற்றதை பார்வையிட்டார்கள். மேலும் பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு முகக்கவசம் துணி, மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், லோகநாதன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டார்கள்.