கேஐடி கல்லூரியில் புதிய யுஏவி ஆராய்ச்சி கூடம் துவக்கம்

கோவை கேஐடி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் ஏரோனாட்டிகள் இன்ஜினீரிங் துறையும் அக்ரிகல்ச்சர் இன்ஜினீரிங் துறையும், சென்னை அண்ணா பல்கலை கழகம் எம்ஐடி யும் இணைந்து யுஏவி ஆராய்ச்சி கூடத்தை கேஐடி கல்லூரி வளாகத்தில் துவங்கியது.

இதன் தொடக்க விழாவில் விண்வெளி ஆராய்ச்சி மையம், எம்ஐடி வளாகம், அண்ணா பல்கலை கழகம், இயக்குனர் செந்தில்குமார் ட்ரான் வடிவமைப்பு பற்றியும் அதன் ஆராய்ச்சி வளர்ச்சி பற்றியும், எளிய மக்கள் குறிப்பாக விவசாயத்துறையில் அதன் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி ஏடுத்துரைத்தார். மேலும் வளருகின்ற தொழில்நுட்பத்தில் குறிப்பாக ராணுவம், விவசாயம் மற்றும் மருத்துவ துறைகளில் இன்னும் சில ஆண்டுகளில் ட்ரான் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்க போகின்றது. இதனை கருத்தில் கொண்டு கேஐடி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி தங்களுடைய பாடத்திட்டத்தில் இதை சிறப்பு பாடமாக ஏற்றுக்கொண்டு நடத்த முன்வந்ததற்கு தன்னுடைய பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொண்டனர். மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு யுஏவி மற்றும் ட்ரானின் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் கல்லூரி நிறுவனத் தலைவர் பொங்கலூர்.நா.பழனிச்சாமி, கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.