ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 24 ஆண்டு விழா

கோவை, துடியலூர் அருகே வட்டமலைபாளையத்திலுள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 24 ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் கட்டிடவியல் துறை தலைவர் நிவேதிதா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மிநாராயண சுவாமி தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருத்தினராக கோவை, உதவி வன பாதுகாப்பு அதிகாரி எம்.செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவர்கள் இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் அதனை பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு மர கன்றாவது  நட்டு அதனை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதைதொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 2019 – 2020ஆம்  கல்வியாண்டில் கல்லூரியின் சிறந்த மாணவராக மெக்கானிக்கல் துறை மாணவர் பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்க பட்டார்.

மேலும், ஒவ்வொரு துறையிலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் விபரமாவது: கட்டிடவியல் துறை பரணீதரன் வி,எஸ், மெக்கானிக்கல் ஹரிபிரசாத், ஆட்டோமொபைல் சிவகாமி, எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் ஹர்சத், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் சவுந்தர்யா, கணிப்பொறியியல் ஸ்வேதா, கருவி மற்றும்  கட்டுப்பாட்டு துறை என் பவித்ரலக்ஷ்மி ஆகியோருக்கு பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பின்னர் மாலையில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.