படத்தின் வெற்றிக்கு கதைக்களம் அவசியம்

பெண்கள் எப்போதும் அழகுதான். அந்த அழகை யாராலும் வர்ணிக்காமல் இருக்க முடியாது. பள்ளி பருவத்தில்தான் முதல் காதல் வர தொடங்கும். அப்பொழுது ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவன் மனதுக்குள் இனம் புரியாத ஏக்கத்தை உணர ஆரம்பிப்பான். அதற்கு முன்பு, தன் கள்ள கபடம் இல்லாமல் பேசி கொண்டு இருந்த மனது, காதல் வந்த பிறகு பெண்ணை பார்த்து பேசுவதற்கு பல தயக்கம் ஏற்படும். நம் காதலை ரசிக்க நாம் பயன்படுத்தி கொள்வது சினிமா மட்டும்தான். சினிமாவில் வரும் கதாநாயகியை பார்த்து இந்த மாதிரி அழகான பெண்ணாக நம் காதலி மாற வேண்டும் என்று நினைக்க தோன்றும். மக்களை ரசிக்க வைப்பதற்காக வட மாநிலம், கேரள மாநிலத்தில் இருந்து கதாநாயகிகளை தமிழ் படத்தில் நடிக்க வைத்து பல பேரும் புகழும் பெற்று எடுத்து கொடுத்து இருக்கிறார்கள் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆனால் ஒரு தமிழ் பெண் தமிழ் படத்தில் வெற்றி பெறுவது மிக கடினமான விஷயம்.

ஒன்று இரண்டு பேர் புகழ் பெற்று இருக்கலாம் ஆனால் அதிகமான திறமைசாலிகள் வாய்ப்புகள் கிடைக்கா மல் காணாமல் போனது உண்டு. சில தமிழ் கதாநாயகிகள் வேற்று மொழியில் தன் வெற்றியை நிலை நாட்டி உள்ளார்கள். ஆனால் அவர்களை பற்றி நாம் பேச போவது கிடையாது. நம் தமிழ் நாட்டில் பிறந்து தாய் மொழி தமிழ் மொழியை தன் உயிர் மொழியாய் பாவித்து கொண்டு இருக்கும். சிறு வயதில் பல மேடைகளில் ஏறி இறங்கி வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் தன் திறமைகளை வெளி கொண்டு வர வேண்டும் என நினைக்கும் மிஸ் கிளாமர்  இந்தியா வின்னர் 2016 நயனா சாய் அவர்களை சந்தித்த பொழுது நம் தி கோவை மெயிலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை காண்போம்.

ஹாய்… வணக்கம்… தி கோவை மெயில்ல என்னோட வாழ்க்கை பதிவுகளை நான் சொல்றது பெருமையா நினைக்குறேன். நான் சுத்த தமிழ் பேசுற தமிழ் பொண்ணுதான். தமிழ் சினிமா எனக்கு எப்போவும் ரொம்ப பிடிக்கும் என் தாய்மொழி தமிழ் என்பதினால் சினிமா மேல் எனக்கு ஆர்வம் சின்ன வயசுல இருந்திச்சு. ஆனால் அதை பற்றி நான் எப்போவும் யோசிச்சது கிடையாது. பெண்கள் எப்போதும் அழகுதான் அதுவும் தமிழ் பெண்கள் ஒரு தனி அழகுதான் அதை நம்ம எப்போவும் ரசிக்க கத்துக்கனும். நம்ம மண் சார்ந்த கதைகள் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றும். நம் தமிழ் பெண்கள் இந்த கதை களத்தில் நடித்து இருந்தால் கண்டிப்பா இன்னும் கதையின் ஆழம் நன்றாக இருந்திருக்கும் என்பதை பல தடவை யோசித்துண்டு. ஒரு நாள் இரவு என் மனதில் ஒரு சிறு யோசனை ஒலித்தது. நம்ம என் சினிமாவில் நடிக்ககூடாது என்று. அதற்கு கண்டிப்பாக பல திறமைகள் வேண்டும் அது நம்மிடம் இருக்கிறதா என்பதை நான் பார்க்க தொடங்கினேன்.

முக கண்ணாடி முன்பு நின்று எனக்கு பிடித்த சினிமா கதா பாத்திர த்தை மனதில் நினைத்து கொண்டு நடித்து பார்ப்பேன். சிறிது காலம் கழித்து என் மேல் எனக்கு நம்பிக்கை வர தொடங்கியது. அதற்கு அப்புறம் அடுத்த கட்டம் என்ன பண்ணலாம்னு என்று யோசியிக்கும் பொழுது முக தோற்றத்தையும் உடல் தோற்றத்தையும் அழகு பண்ணி கொள்ள வேண்டும் என்று நினைத்து களத்தில் குதித்தேன். காலம் கடக்க மாடலிங் மற்றும் அழகு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று எனக்குள் தோன்றியது. உடனே என் விருப்பத்தை என் அம்மாவிடம் கூறினேன்.  உனக்கு பிடித்த விஷயம் எதுவாக இருந்தாலும் ரசித்து செய் உனக்கு வெற்றி தேடி வரும் என்று கூறினார். ஆனால் எங்க அப்பா இது வேண்டாம் நீ நல்லா படிக்கணும்னு சொன்னாரு. ஆனால் என் பிடிவாதத்தை நான் விடவில்லை. லிட்டில் பிரின்ஸ் கர்நாடகா 2012 யில் கலந்து கொண்டேன் அதில் வெற்றியும் பெற்றேன்.  அதற்கு பிறகு என் மேல் எங்க அப்பாவுக்கு ஒரு நம்பிக்கை வர ஆரம்பித்தது. அதுக்கு அப்புறம் மிஸ் கிளாமர் இந்தியா 2016 வெற்றி என் மனதில் ஆழமான நம்பிக்கையை உண்டாக்கியது.

என் வெற்றி படிக்கட்டில் எங்க அம்மாவுக்கு பிறகு எனது குரு முகிலன் மற்றும் என் குமார் அவர்கள். கடந்த 5 வருடமாக முறையான நடன பயிற்சி மற்றும் நடிப்பு பயிற்சி எடுத்து கொண்டு வருகிறேன். இப்பொழுது ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறேன். அந்த பட த்தின் பெயர் ஓம்படிநீ அட்புதா. நல்ல கதையம்சமுள்ள படங்களில் வரும் காலங்களில் நடிக்க மிக ஆர்வமாக உள்ளேன். ஒரு படத்துக்கு கதை மற்றும் கதைக் களம்தான் முக்கியம். கதை மக்களை தீர்மானிக்கும் பொழுது அந்த இடத்தில் என் திறமை கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது எனது கருத்து. எப்போவும் போல எல்லாரும்

சந்தோஷமா இருங்க. கஷ்டத்தை எப்போதும் பார்க்க வேண்டாம். நமக்குள் இருக்கும் நல்ல விஷயம் நம்மளை எப்போவும் சந்தோஷமா வச்சுக்கும்னு நான் எப்போதும் நினைத்து கொள்வேன். ரொம்ப நன்றி. ஒரு தமிழ் பொண்ணா கூடிய விரைவில் தமிழ் படம் மூலமாக உங்களை வந்து சந்திக்கிறேன். வாய்ப்பு அளித்த தி கோவை மெயில் க்கு நன்றிகள் சொல்லி கொண்டு விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

  • பாண்டியராஜ்.