வாழ்வியலுடன் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்த வேண்டும்

-டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு விழா 2020 நிகழ்ச்சியில் ஜெ.சிவக்குமரன்

டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக ‘வேலைவாய்ப்பு விழா 2020’ நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி தலைமையேற்றுச் சிறப்பித்தார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தன் வாழ்த்துகளைக்  கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மருத்துவ மையத்தின் முதன்மை இயக்க அலுவலர் முனைவர் சிவக்குமரன் கலந்து கொண்டார்.

இவர்களுடன் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் மருத்துவர் அருண் நல்ல பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி. பள்ளியின் கல்வி இயக்குநர் மதுரா அருண்பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் இயக்குநர் முனைவர்.பி.ஆர் முத்துசாமி, கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ஓ.டி.புவனேஸ்வரன், டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் நல புலமுதன்மையர் வி.சண்முகராஜீ இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் பயிற்சி வேலைவாய்ப்பு அதிகாரி பாலாஜிகுணசேகரன் முதன்மையுரை வழங்கினார். வேலைவாய்ப்புத்துறையில்  இளநிலைப் பட்டதாரிகளுக்கும், முதுநிலைப் பட்டதாரிகளுக்கும்  இன்போசிஸ், ஐபிஎம், அமேசான், விப்ரோ, காக்னிசென்ட், டெலாய்ட், டிசிஎஸ், சிபோ, ஆர்.என்.டி, எம்.ஆர்.எப் டயர்ஸ், கேப்ஜெமினி, ஏஸ்பயர், கான்சென்ட்ரிக்ஸ், எச்.சி.எல், ஏட்மெக்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களில் 1623  மாணவர்கள் பணியிடங்கள் பெற்றமையை முதன்மைப்படுத்திக் கூறினார்.

சிறப்பு விருந்தினர் ஜெ.சிவக்குமரன் பேசுகையில்,  மாணவர்கள் தான் செல்லும் பணிகளில்  மேலும் சிறப்பு பெற்று விளங்க தனது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தி, மாணவர்கள் தங்களது வாழ்வியல் வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்த முன்வரவேண்டும் என்று கூறினார்.

டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி பேசுகையில், கால மேலாண்மையையும், அவற்றின்  சிறப்பினையும் கூறி, கல்லூரியில் உள்ள சுழலை மாணவர்கள் தங்களது வளர்ச்சிக்குப் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வெற்றிபெற வாழ்த்தினார். மாணவர்களது வெற்றிக்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி, திட்டமிடல், அவற்றின் செயல்நிலை ஆகியவற்றையும் பாராட்டினார்.

கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் மருத்துவர் அருண் நல்ல பழனிசாமி பேசுகையில்,  மாணவர்கள் சுயதொழில்  தொடங்குவதற்கான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு தன் நாட்டில் சிறப்புபெறும் வகையில் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வாழ்த்தினார். டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் இயக்குநர் பி.ஆர் முத்துசாமி பேசுகையில், மாணவர்கள் தனது பேச்சாற்றலையும்,நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் அறிவுரை வழங்கினார். தன் முயற்சியாலும், கடின உழைப்பாலும் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார்.