கழிப்பறை இல்லை என்றால் விவாகரத்து

பாலிவுட் சினிமாவில் வருஷத்துக்கு அதிகமான படங்கள் நடிக்க கூடியவர் நடிகர் அக்ஷயகுமார். மக்களை கவரும் வகையில் பல படங்கள் நடித்து உள்ளார். சில சமயங்களில் கதையம்சமுள்ள படங்களை தேர்வு செய்து அதில் தன்னோட மிகச் சிறந்த நடிப்பை காட்ட கூடியவர். இந்த மாதம் அக்ஷ்யகுமார் மற்றும் பூமி பட்னிகர் நடித்து வெளியான படம்தான் ‘டாயிலெட்  எக் பேரம் கதா’ என்ற திரைப்படம். இந்த படத்தின் அறிமுக போஸ்டரை பார்த்த உடன் உண்மை சம்பவங்களை வைத்து எடுத்து இருப்பார்களோ என்று யோசனை செய்யும் அளவுக்கு இருந்தது. படத்தில் முக்கிய கதா பாத்திரமாக சொல்லக் கூடிய விஷயம் கதை மற்றும் திரைக்கதை என்று ஆணித்தரமாக சொல்லலாம்.

நம் நாட்டில் பல துறைகளில் நாம் முன்னேறி கொண்டு இருக்கிறோம். ஆனால் சில கிராமங்கள் இன்னும் முன்னேற்ற பாதைக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். மூட நம்பிக்கை மற்றும் பெண்கள் அடிமை போன்ற விஷயங்களை ‘டாயிலெட் எக் பேரம் கதா’  திரைப்படம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. ஒரு அழகான கிராமத்தில் தனக்கு உண்டான தொழிலை மிக சிறப்பாக செய்து கொண்டு வாழும் அக்ஷ்யகுமார், பூமி பட்னிகர்யை பார்த்தவுடன் அவர் மனதில் காதல் மலர ஆரம்பிக்கிறது. ஒரு தருணத்தில் அக்ஷ்யகுமாரின் காதலை ஏற்று கொண்ட பூமி பட்னிகர் அவரை திருமணம் செய்ய முடிவு எடுக்கிறார். சந்தோஷமான வாழ்க்கை நமக்கு கிடைக்க போகிறது என்ற எண்ணத்துடன் மனதில் பல கனவுகளை கண்டு வருகிறார் பூமி பட்னிகர். இருவரின் காதலை புரிந்து கொண்ட இரு தரப்பு பெற்றோர்கள் மிகவும் விமர்சியாக திருமணத்தை நடத்தி முடிக்கின்றார்கள்.

அக்ஷயகுமாரும் திருமணம் முடிந்தவுடன் முதல் இரவுக்கு சந்தோசமாக ரெடி ஆகிறார். காதல் வெற்றி பெற்றது போல முதல் இரவு முடிந்த மறுநாள் அதிகாலையில் அந்த கிராமத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் புது பெண் பூமி பட்னிகரை காலை கடன் அளிக்க வாங்க போகலாம் என்று சொல்லும்போது பூமி பட்னிகருக்கு பேர் அதிர்ச்சி. அந்த கிராமத்தில் எந்த வீட்டிலையும் கழிப்பறை கிடையாது. காலம் காலமாக அந்த ஊரில் இருக்கும் பெண்கள் அதிகாலை வேளையில் ஒரு கையில் விளக்கு மற்றொரு கையில் தண்ணீர் எடுத்து கொண்டு காலை கடனை கழிக்க சென்று வருவது வழக்கமாக இருக்கின்றது. இந்த விஷயம் பூமி பட்னிகருக்கு பிடிக்காமல் இருக்க இதை அக்ஷ்யகுமாரிடம் சொல்ல வீட்டில் ஒரு புது பிரச்னை ஆரம்பம் ஆகும் சூழல் ஏற்படுகிறது. ஆனால் நமக்கு நம் மனைவி முக்கியம் என்று புரிந்து கொண்டு ஒவ்வொரு நாள் தன் மனைவியை பக்கத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் நிற்கும் ரயிலில் காலை கடனை கழிக்க உதவி செய்கிறார் அக்ஷ்யகுமார்.

ஒரு நாள் பூமி பட்னிகர் அந்த ரயிலில் மாட்டி கொள்ளும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இந்த விஷயத்தினால் மனம் உடைந்துபோய் பூமி பட்னிகர் தனது அப்பா அம்மா வீட்டுக்கு சென்று விடுகிறார். வீட்டில் கழிவறை கட்டினால்தான் நான் வருவேன் இல்லை என்றால் நான் விவாகரத்து செய்து விடுவேன் என்று சொல்ல, உடனே அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து வீட்டில் கழிவறை கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்து தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து கழிப்பறை கட்டி முடித்து கழிவறை முன்பு தாஜ் மஹால் படத்தை வைத்து தன் மனைவி வந்து இதை திறப்பு விழா பண்ண வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் அக்ஷ்ய குமார். அதற்கு பிறகு இந்த செயல் சுத்தமாக அக்ஷ்யகுமார் தந்தைக்கு பிடிக்காத காரணத்தினால் இடிச்சு தரமட்டம் ஆக்குகிறார். இதை அறிந்த பூமி பட்னிகர், தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் இந்த மாதிரியான கிராமம் உள்ள விஷயத்தை சொன்னவுடன் இவரை போல் அந்த ஊரில் இருக்கும் பெண்கள் அனைவரும் கழிவறை இல்லாத ஊரில் நாங்க இருக்க மாட்டோம்னு சொல்லி எங்களுக்கு விவகாரத்து வேண்டும் என்ற ஒரு புரட்சி வெடிக்கின்றது. அதற்கு பிறகு அந்த கிராமம் என்ன ஆகின்றது. அக்ஷ்யகுமார், பூமி சேர்ந்தார்களா என்பது தான் மீது கதை. இயக்குனர் ஸ்ரீ நாராயண சிங் உழைப்பு படம் பார்க்கும் அனைவரையும் யோசிக்க வைத்துவிட்டது என்று சொல்லலாம். நாட்டில் இன்னும் பல கிராமங்கள் முன்னேறாமல் இருக்கிறது. இந்த படம் அதற்கு ஒரு வழி வகுக்கும் என்று நம்புவோம்.

  • பாண்டிய ராஜ்