தடுக்க முடியவில்லை என்றாலும், தவிர்க்கலாம்

உலகம் முழுவதிலும் அதிகபடியானோர் உச்சரித்து கொண்டு இருக்கும் வார்த்தை கொரோனா. இந்த நாட்டில் இத்தனை பேருக்கு இருக்கிறது, அந்த நாட்டில் அத்தனை பேர் பலி என்று நம்மில் பலரும் செய்தி வாசிப்பாளராக மாறி நமக்கு தெரிந்த சிலவற்றைவும், தெரியாத பலவற்றையும் வாய் வழியாக பரப்பி கொண்டிருக்கிறோம். இருந்தாலும் இதனை தற்பொழுது தடுக்க முடியவில்லை என்றாலும், இதனை தவிர்க்கலாம்.

செய்ய கூடாதது

* பொது இடத்தில் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் தவிர்த்தால் இன்னும் நல்லது.

* தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்தால், அவர்களுடன் நெருங்கி பழகுவதையும், உங்களுக்கு இருந்தால் மற்றவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும்.

* இருமல், தும்மல் வந்தால் உள்ளங்கையால் மூடுவதை தவிர்ப்பது நல்லது.

* சரியாக சமைக்காத இறைச்சியை உண்ண வேண்டாம்.

* விலங்குகளுடன் நேரடி தொட்டு விளையாட வேண்டும்.

செய்ய வேண்டியவை

* இருமல், தும்மல் வந்தால் டிஸ்சு அல்லது முழங்கையை கொண்டு மூடி கொள்வது நல்லது.

* டிஸ்சு பேப்பர்களை உபயோகித்த உடனே குப்பை தொட்டியில் போட்டு விட வேண்டும்.

* காய்ச்சலுக்கான அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* கைகளை அடிக்கடி சோப் அல்லது ஹேண்ட் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* தனிப்பட்ட முறையில் உடலையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருந்தல் அவசியம்.

தகவல்: நக்கீரன்