பெண்கள் பாதுகாப்பில் கோவை சிறந்த நகரம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலத்தில் நடைபெறும் அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ( 24.02.2020 ) கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.

இவர் பேசுகையில், அம்மா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினமாக அறிவித்து இன்று நடைமுறை படுத்தியுள்ளோம். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் பாதுகாப்பில் கோவை முதலிடமும் பெருநகரத்தில் சென்னையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி சாலையில் செல்லும் நிலை உள்ளது. நகரில் சி சி டிவி கேமரா பொறுத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. சி ஏ ஏ வுக்கு எதிரான இஸ்லாமியர் போராட்டம் தொடர்பாக தானும் வருவாய் துறை அமைச்சரும் சட்டமன்றத்தில் தெளிவாக கூறியுள்ளோம். தமிழகத்தில் எந்த சிறுபான்மையினரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.