சிறந்த சேட்டிலைட் சென்டர் விருது பெற்ற இந்துஸ்தான் கல்லூரி

இந்தியா செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் கோவை பிரிவின் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த சேட்டிலைட் சென்டருக்கான விருதை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரிக்கு வழங்கியுள்ளது. இவ்விருதை  சாஃபா (SAFA) நிறுவனத்தின் தலைவர் ஜெகன் மோகன் ராவ் வழங்க கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி பெற்றுக்கொண்டார்.

மேலும், இக்கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் கண்ணன், கோவை CMA நிறுவனத்தின் சிறந்த செயல்பாட்டாளர்களுக்கான விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.