இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ‘கேக் மிக்சிங் திருவிழா’

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் கேட்ரிங் துறையின் சார்பாக ‘தி கேக் மிக்சிங் திருவிழா’ நடைபெற்றது.

இந்த கேக் தயாரிக்கும் நிகழ்ச்சியில் உளர் திராட்சை, முந்திரி, பாதாம், ஒயின், கொண்டு 45 நாட்கள் ஊரவைத்து, அதனை கிறிஸ்துமஸிற்க்கு கேக்காக தயாரிக்கவுள்ளனர். இதனை 35 கிலோவாக இந்துஸ்தான் கல்லூரி கேட்ரிங் துறை மாணவர்கள், பில்லாபாங் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் என 150 மாணவர்கள் தயாரிக்கவுள்ளனர்.

இந்த கேக்கில் எந்த ஒரு ரசாயணப்பொருட்களும் சேர்க்காமல் முழுக்க, முழுக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டே தயாரிக்கின்றனர். இதில் சிறப்பு விருந்தினராக ஃபேர்பீல்ட்டு மேரியடின் செஃப் ஜனார்த்தன் கலந்துகொண்டார்.

மேலும், இவருடன் இந்துஸ்தான் கல்வி நிறுவங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயளர் பிரியா சதீஸ்பிரபு, முதல்வர் பொன்னுசாமி, துறை தலைவர் பிரேம் கண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.