இயற்கை நமக்கு பாடம் கற்று கொடுக்கிறது – டாக்டர் R.V.ரமணி

ஸ்ரீராமகிருஷ்ணா பல்மருத்துவக் கல்லூரியின் 15வது பட்டமளிப்பு விழா, எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ டாக்டர் R.V.ரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அடுத்த ஆண்டு சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சங்கரா மருத்துவமனையின் சார்பில் பதக்கம் வழங்கப்படும் என்றார் டாக்டர் R.V.ரமணி

எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் இணை அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் டாக்டர் தினகரன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் 75 மாணவர்கள் இளங்கலை பட்டமும் 10 மாணவர்கள் முதுகலைப் பட்டம் பெற்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 11 மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த சிறந்த வெளிச்செல்லும் மாணவராக  இளங்கலை மாணவர் டாக்டர் R. நிதிஷ் கிருஷ்ணாவும், ஒட்டுமொத்த சிறந்த அகாடமிக் மாணவியாக இளங்கலை மாணவி டாக்டர் M. சுவாதி ரேணுகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் இணை அறங்காவலர் லட்சுமிநாராயணகவாமி அறக்கட்டளையின் நற்பணிகளையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி சிறப்பையும், உயர்தர கல்வி மற்றும் பல் மருத்துவச் சேவை எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் பத்ம ஸ்ரீ டாக்டர் R.V.ரமணி, பட்டம் பெற்ற இளம் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல் மருத்துவத் துறையின் முக்கியத்துவம் பற்றியும், சேவை மனப்பான்மையுடன் நோயாளிகளுக்கு  அளிக்கும் சிகிச்சை பற்றியும் விரிவாக உரையாற்றினார்.

இவ்விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்களும் மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவினை  சிறப்பித்தனர்.