பி.வி.சிந்துவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பாராட்டு

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பாராட்டு தெரிவித்துள்ளார். வரலாறு படைத்ததன் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் பி.வி.சிந்து என்று கிரண் ரிஜிஜூ புகழாரம் சூட்டியுள்ளார். எதிர்காலத்திலும் பல போட்டிகளில் பி.வி.சிந்து வெற்றி பெற்று இந்தியாவுக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்து  தெரிவித்தார் கிரண் ரிஜிஜூ.