டவுன்லோட் வேகத்தில் ஜியோ தான் மீண்டும் டாப்

இந்தியாவில் இணைய சேவையில் ஒரு புது பரிணாம வளர்ச்சியை கொண்டுவந்தது ரிலையன்ஸ் நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் ஜியோ சேவை தற்பொழுது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.இந்நிலையில் இந்திய தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையத்தின், ‘மை ஸ்பீட்’ தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 4ஜி இணைய சேவையில் அதிவேக டவுன்லோட் சேவையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ சேவை 4ஜி சேவையி அதன் வேகத்தை பொறுத்தவரை முன்னனியில் இருக்கிறது, ஜியோ சராசரியாக 21 எம்பிபிஎஸ் வேகத்தில் டவுன்லோட் வசதியை கடந்த ஜுலை மாதம் அளித்துள்ளது. ஜூன்மாதம் இதன் அப்லோட் வேகம் சராசரியாக 17.6 எம்பிபிஎஸ் ஆக இருந்ததது, ஜூலை மாதத்தில் 21 எம்பிபிஎஸ்-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டை பொறுத்தவரை அதிவேக 4ஜி சேவையை கொடுத்த நிறுவனமாக ஜியோ நிறுவனம் திகழ்ந்தது. 2019ம் ஆண்டின் 7 மாதங்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டும் அனைத்து மாதங்களிலும் ஜியோ சேவையே முன்னிலை வகிக்கிறது.
அப்லோட் வேகத்தை பொறுத்தவரை வோடஃபோன் நிறுவனம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. சராசரியாக 5.8 எம்பிபிஎஸ் வேகத்தில் அப்லோட் செய்திருக்கிறது. இந்த வேகமானது ஜூன் மாதத்தில் 5.7 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது.
ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் அப்லோட் வேகம் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த மாதத்தில் ஐடியாவின் அப்லோட் வேகம் 5.3 எம்பிபிஎஸ்-ஆகவும், ஏர்டெல்லின் அப்லோட் வேகம் 3.2 ஆகவும் இருந்தது. ஜியோ நிறுவனத்தை பொறுத்தவரை அதன் சராசரி அப்லோட் வேகம் 4.3 எம்பிபிஎஸ் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.