ஐஐடி, எய்ம்ஸ் கல்வி நிறுவனங்கள் இனி ஜம்மு காஸ்மீரில் ! – பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி : 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய ஆயுதம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காஸ்மீரில் 370 சட்டம் நீக்கப்பட்டது குறித்தும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் டிவிகளில் பேசி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், 370வது சட்டப்பிரிவு ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. தற்பொழுது, காஷ்மீர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

லடாக் பகுதி காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களால் லடாக் பகுதிக்கு எந்த பலனும் இல்லை.

370 சட்டப்பிரிவு நீக்கத்தால் காஷ்மீர், லடாக் பகுதிகள் வளர்ச்சி அடையும். பயங்கரவாதம் மற்றும் குடும்ப ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் 370 நீக்கப்பட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டது. ஜம்மு -காஷ்மீரில் ஐஐடி, எய்ம்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்கள் நிறுவப்படும். நீண்ட நாள் ஆய்வுக்கு பிறகு 370 சட்டப்பிரிவை நீக்கினோம். ஜம்மு- காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்கியது மிகவும் யோசித்து எடுத்தப்பட்ட முடிவு ஆகும்.

சுற்றுலா தலம் பாதுகாப்பு படைகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை சுற்றுலா தலமாக மாற்றப்படும்.

370 சட்டப்பிரிவு நான் அண்மையில் காஷ்மீர் சென்றபோது அங்கு மின்சாரம், சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளை ஜம்மு காஷ்மீரில் இனி நடத்தலாம். திரைப்பட நிறுவனங்களை உருவாக்கலாம். 370 சட்டப்பிரிவு நீக்கத்தால் குழந்தைகள், பெண்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ வசதி கிடைக்கும் என்றார்.