5 நிமிடங்களில் உங்களின் ஆன்லைன் மொபைல் ஸ்டோர்

வணிகத்தை மேன்படுத்த தங்களுக்கான ஒரு பிரத்யேக ஆன்லைன் இருப்பு மற்றும் வியாபாரத்தை ஸ்தாபிக்க இயலாத தனி நபர்கள் மற்றும் சிறு நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்  டியூநௌ- (duNow)

வியாபாரத்திற்கு தேவையான தகவல் தொழில் நுட்ப செலவு இல்லாமல், மற்ற பெரிய வெப்சைட்டுகளின் சந்தை வணிக கமிஷன் ஏதும் இல்லாமல், இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களை நேரடியாக சென்றடைவதுடன் அவரது லாபங்களை பன்மடங்கு அதிகரிக்க உதவுகிறது டியூநௌ.

ஆடை அலங்கார நகை வணிகர்கள், பேஷன் டிசைனர்கள், நெசவாளர்கள் மற்றும் நெசவாள சங்கங்கள், ஒட்டு மொத்த வியாபாரிகள் என பலரும் இப்போது தங்களது வருவாயை மொபைல் போன் மூலமே பாதுகாப்பான முறையில் மேம்படுத்த வழி வகுக்கிறது டியூநௌ.

கோவை தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீவத்சனால் உருவாக்கப்பட்ட டியூநௌவை  கூகுள் பிளேயில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

ஐந்தே நிமிடங்களுக்குள் உங்கள் ஆன்லைன் ஸ்டோர்  ரெடி.

ஒரு வணிக நிறுவனத்திற்கு அத்தியாவசியமான அனைத்து அம்சங்களான லோகோ, விற்பனை பொருட்களுக்கான காட்சி முகடு, விற்பனை மற்றும் கொள்முதல் அட்டவணை, சரக்கு மேலாண்மை அமைப்பு, தானியங்கி முன்பதிவு விசாரணை, மொத்த விற்பனை வசதி, பாதுகாப்பான நிரந்தர கட்டண பரிவர்த்தனை இணைப்பு, டிஜிட்டல் ரசீது, வாடிக்கையாளர்களின் கருத்து அறிவதற்கான நேரடி தகவல் தொடர்பு என பல வசதிகளை உள்ளடக்கியுள்ளது டியூநௌ.

பதிவிறக்கம் செய்த பிறகு தொழில் முனைவோர்கள் இச்செயலியின் அனைத்து அம்சங்களையும் இலவசமாக 30 நாட்கள் வரை உபயோகிக்கும் சலுகையை அறிவித்துள்ளது டியூநௌ. அதன்பிறகு  வியாபார நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற இலவச வாழ்நாள் அடிப்படைத்திட்டம்  அல்லது நாள்  ஒன்றுக்கு (1) ரூ.20 என்று பிரீமியம் திட்டத்தில்  ஒன்றை தேர்வு செய்யலாம்.

மொபைல் போனில் மட்டுமே 70% ஆன்லைன் ஆர்டர்கள் மேறகொள்ளப்பட்டு, அதன் வழியான வணிகம் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 31% உயர்ந்து 32.7 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

டியூநௌ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீவத்சன் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: “இந்தியாவில் ஆன்லைன்  ஆடை சந்தையின் சில்லறை விற்பனை வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருப்பினும், அதனை சார்ந்த சவால்களும், சிக்கல்களும் அதிகரித்து கொண்டு தான் வருகின்றன. பல்வேறு காரணங்களால் இணைய தொழில் நுட்ப தீர்வுகை தங்கள் வியாபாரத்தில் செயல்படுத்த இயலாத சிறு குறு மற்றும் நடுத்தர வணிகர்கள், பன்மடங்கு வளர்ந்து வரும் இந்த ஆன்லைன் வணிகத்தின் வாய்ப்புகளை முழுமையாக அனுபவிக்க இயலவில்லை”.

டியூநௌ இணை நிறுவனர் திரு. பரத் பாலச்சந்திரன் கூறுகையில் “இந்தியாவின்  ஆடைச்சந்தை நுண்ணிய துறை சார்ந்ததாகவும், தனித்துவம் மிக்கதாகவும் மற்றும் வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனையும், அனுபவத்தையும் சார்ந்ததாகவும் உள்ளது.  டியூ-நௌ, ஆடை மற்றும் பேஷன் சந்தையின் ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு பின் உருவாக்கப்பட்டது. எட்ட இயலாத தொழில் நுட்பத் தீர்வுகளை இனி 5 நிமிடங்களுக்குள் மாற்றிவிடும்  டியூநௌ. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இத்தகு செயலி கொண்டு தங்களின் வியாபாரத்தையும், லாபத்தையும் பன்மடங்கு அதிகரித்துக் கொள்ளமுடியும்”.

ட்யூநௌ செயலியை உருவாக்கிய  ஸ்ரீவத்சன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பரத் பாலச்சந்திரன் ஆகியோர், முன்பு வால்மார்ட்டில் வேலை செய்தவர்கள். இருவரும், பி2பி, பி2சி இயக்கத்தை அறிந்தவர்கள்.