ஆணாக மாறும் பெண் மீன் !

ஆழ்கடலில் எண்ணற்ற மீன்கள் உள்ளது. இதில் சிலவற்றை நாம் உணவாக எடுத்து கொள்ளலாம். ஆனால் நம் கண்களுக்கு தெரியாமல் பலவகை மீன்கள் உயிர்வாழ்கின்றன

இங்கு பலவகையான மீன்கள் உள்ளது. ஒவ்வொன்றும் அதற்கென தனித்தன்மையை பெற்றுள்ளது. குறிப்பாக கடல் குதிரை, ஜெல்லி மீன் போன்றவை. கடல் குதிரை மீன்கள்  பெண் மீன் போட்ட முட்டைகளை தன் வயிற்றில் வைத்து அந்த முட்டைகள் பொரிக்கும் வரை பாதுகாக்கும். ஜெல்லி மீன்கள் யாரும் இல்லாத விச தன்மையும், ஒளிரும் தன்மையும் கொண்டது.

இதே போன்று ஆழ்கடலில் காணப்படும் மீன் வகைகளில் ஒன்று, எந்த சிகிச்சையும் இல்லாமல் தனது பாலினத்தை மாற்றிக்கொள்கிறது. கரீபியன் கடல் பகுதியில் காணப்படும் மீன் வகைகளில் ஒன்று ப்ளூஹெட் வ்ரேசஸ். இந்த கூட்டத்தில் உள்ள ஆண்மீன்களை அப்புறப்படுத்திவிட்டால் அடுத்த 10 நாட்களில் அங்குள்ள பெரிய பெண்மீன் ஒன்று ஆணாக பாலின மாற்றம் அடைவதுடன், அதன் நிறம், குணம் போன்றவற்றையும் மாற்றிக்கொள்கிறது.

இதை ஆய்வு செய்த வின்ஞானிகள், மின்சார பெட்டியில் இணைப்பை மாற்றுவதை போல வ்ரேசஸ் மீனில் பாலின மாற்றம் நிகழ்வதாக கண்டறிந்துள்ளனர். பெண் மீனுக்குள் இருக்கும் கருப்பையை இயக்கம் மரபணு செயல்பாடு முடக்கப்பட்டு ஆணுக்கான மரபணுக்கள் இயக்கப்படுவதாக இந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.