தீயில் தத்தழித்த அபயக்குரல்கள்

எண்ணத்தில் இருந்து நீங்கா துயரம், கண்களில் இருந்து மறையாத காட்சி, இந்த தமிழகம் எத்தனையோ துயரங்கள் கண்டுள்ளது. இருபினும், அத்தனைக்கும் மேல் ஒரு படி சென்று ஒன்று அறியாத, சந்தோசம் மட்டுமே நிறைந்து புன்னகை மட்டுமே முகத்தில் பூத்து இருக்கும் 94 குழந்தைகள் தீயில் தத்தழித்து அபயக்குரல் இட்டு நெருப்பிற்கு உணவாய் உயிர் நீத்தார்கள்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, தீவிபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த குழந்தைகளுக்கு பாலக்கரை காவேரி ஆத்துப்பாலம் அருகே பூங்காவில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த குழந்தைகளுக்கு நினைவு நாளில் நினைவு சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்படும்.அதுமட்டும் அல்லாமல் குழந்தைகள் புதைக்கப்பட்ட இடத்தில் அவர்களின் விருப்ப பண்டத்தை வைத்த மலர்கள் வைத்து அவர்களது அன்பை வெளிப்படுத்துவார்கள்.

இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர். 18 நபர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. இத்தீவிபத்து மதிய உணவு தயாரிக்கும்போது ஏற்பட்டது. இவ்விபத்திற்கு பின் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் கட்டமைப்பு விதிகளும் கொண்டுவரப்பட்டன.