பெரிய கோவிலுக்கு ஆபத்து

தஞ்சை பெரிய கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோவில். இது 1000 ஆண்டுகள் பழமையானது என்பது நாம் அனைவரும் அறிவோம். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இது இன்றும் கம்பிரமாக நின்று கொண்டு இருக்கிறது. ஆனால் இப்பொழுது ஆபத்து வந்துள்ளது.

தொல்லியல் துறை, தஞ்சை பெரிய கோவிலை சுற்றி 1 கிலோ மீட்டர் க்கு ஃபோர் போடக்கூடாது எனவும், அப்படி ஏதேனும் நிகழ்ந்தால்  216 அடி மற்றும் ஒன்றரை லட்சம் டன் எடையுள்ள பெரியகோவிலின் கட்டுமானத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால்  அங்கு ராஜராஜசோழன் சிலை அமைந்துள்ள இடத்திற்கு அருகே உள்ள பூங்காவை பராமரிப்பதற்காக தற்போது ஃபோர் போடப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி சார்பாக 500 அடி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இதை அறிந்த தொல்லியல் துறையினர், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த பூங்கா தஞ்சை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவிலுள்ள மரங்கள் மற்றும் செடிகள் தண்ணீரின்றி காய்ந்துவிட்டது, அதனால்தான் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணி நடைபெறுகிறது. இது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் யாரிடமும் அனுமதி பெறவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தஞ்சை பெரிய கோவிலுக்கு எதேனும் ஆபத்து வருமா என்பது தெரிய வில்லை.

அனால் அப்படி இடிந்து விழும் அளவிற்கு இந்த கோவில் கட்டப்படவில்லை. இத்தனை புயல் மழையில் இத்தனை ஆண்டுகள் அசையாத இந்த கோவில் என்றும் கம்பிரமாக நிற்கும்.