புதிதாக 81 பாட பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது – உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டபடிப்பில் புதிதாக 81 பாட பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தகவல்.

2019 – 20 ஆம் கல்வி ஆண்டில் புதிதாக 81 பாட பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது என உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு குறுகிய கால பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

இதுபோல அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 100 பட்டய படிப்பு மாணவர்களின் திறன் உலகலவில் மேம்படும் வகையில் அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். இத்திட்டம் 1.50 கோடி செலவில் செயல்படுத்தப்படும், என்று உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.