வேலுமணி அம்மாள் நினைவு போட்டி

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் வேலுமணி அம்மாள் நினைவாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆர்.வி கலை கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்றன. கபடி போட்டி, கைப்பந்து, கால்பந்து மற்றும் எரி பந்து போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 16 பள்ளிகளில் 460 மாணவ மாணவியர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். மாணவியருக்கான கபடி போட்டியில் புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியும், மாணவர்களுக்கான கபடிப் போட்டியில் சின்ன தடாகம் அரசு மேல்நிலைப் பள்ளியும் வெற்றி பெற்றது. மாணவியருக்கான எறிபந்து போட்டியில் கண்ணார்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளி வெற்றி பெற்றது. கைப்பந்து போட்டியில் கோத்தகிரி கில்போர்டு மேல்நிலைப் பள்ளி மாணவியரும் கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி மாணவரும் வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் வி.திருப்பதி செய்திருந்தார்.