உடலை பாதிக்கும் ஊறுகாய் !

ஊறுகாய் என்றவுடன் நாவில் எச்சில் ஊரும். விருந்துகளில் ஊறுகாய் முக்கியம். அனைவைரையும் கவரும் வகையில் நிறம், மனம் நிறைந்து இருக்கும். ஆனால் ஊறுகாயை தினமும் உட்கொள்ளும் போது உடலில் பல்வேறு நோய்களும் வருகின்றன.

பல வகையான ஊறுகாய்கள் எண்ணெய், மசாலா மற்றும் உப்பு சேர்த்து காரசாரமாக இருக்கும். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் அடிவயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் வயிற்று போக்கை உண்டாகும்.

ஊறுகாயில் உள்ள சாறு வயிற்று பிரச்சனையை உண்டாகும். மசாலா பொருட்கள் அதிகளவில் உள்ளதால் அல்சர் வர வாய்ப்புள்ளது.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஊறுகாயை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையேல் மோசமான நிலை சந்திக்கக்கூடும்.

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

ஊறுகாயில் பதப்படுத்தபட்ட பொருட்கள் அதிகம் உள்ளதால், உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு உப்புசமான உணர்வை தரும்.

எனவே, அன்றாடம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ஊறுகாய் செய்து சாப்பிடலாம். அவற்றையும் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ஊறுகாயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.