போராட்டத்தின் நடுவில் ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் என்பது முதலில் கொண்டுவரப்பட்ட நோக்கம். விபத்தில் அல்லது திடீர் மருத்துவ அவசரத்திற்கு உயிரை காப்பாற்ற கொண்டுவரப்பட்டது. இது உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் இதற்கான மதிப்பு இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆம்புலன்ஸ் வந்தாலே அதன் பின் சிக்னலில் நிக்காமல் இதன் பின்னாலேயே செல்வார்கள். சாலை நெரிசலால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நின்றாலும் வழிவிடாமல் நிற்பது போன்றவற்றை ஒருசிலர் செய்கின்றனர்.

ஆனால், ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முழுவதுமாக கைவிட வலியுறுத்தி அண்மையில் சுமார் 20 லட்சம் பேர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அப்போது ஒருவர் போராட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை பெரிய கட்டிடத்தின் மீது வைக்க சுவரில் ஏறியபோது, தவறி கீழே விழுந்தார்.

இதில் காயம் அடைந்தவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்தது. சுமார் 20 லட்சம் பேர் திரண்டு இருந்தாலும் நொடிப் பொழுதில் கடல் அலை விலகிக்கூடுவது போல் ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர். இது மனித நேயத்தை பறைசாற்றுவதாக அமைந்தது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றம் அருகே நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள் மறுநாள் காலை ஒன்று கூடி தங்களால் போடப்பட்ட குப்பைகளை தாங்களே அகற்றியது குறிப்பிடத்தக்கது.

இதை போன்று இந்தியாவில் எப்பொழுதும் நடக்கும். முதலில் இப்படி நடக்குமா என்பது இன்றைய சமுதாயத்தினர் தான் முடிவு செய்ய வேண்டும்.