கேஎம்சிஹெச்-யில் வெரிகோஸ் வெயின் முகாம்!

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், வெரிகோஸ் வெயின் எனப்படும் கால் நரம்பு வீக்கத்துக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் ஜூன் 29-ம் தேதி வரை நடக்கிறது.

கோவை அவிநாசிரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், கால்நரம்பு வீக்கத்துக்கான சிகிச்சை முகாம் கடந்த ஜூன் 5ம் தேதி முதல் துவங்கியது. இந்த மாதம் இறுதி ஜூன் 29 வரை முகாம் நடக்கிறது.

அசுத்த ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் பல்வேறு காரணங்களால்  சீரானதாக இருப்பதில்லை. இதனால், பலருக்கு கால்களில் ரத்த நாளங்கள் வீக்கமடைகின்றன. நாளைடைவில் இது சுருண்டு, வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். நிற்கும்போதும், நடக்கும்போதும் வலி அதிகமாக இருக்கும். இந்த நோயை சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க KMCH-இல் முகாம் நடக்கிறது. அதிநவீன கருவிகள் மூலம் ஸ்கேன் செய்து ரத்த நாள வீக்கத்துக்கான காரணம் கண்டறிய முடியும். முகாம் காலத்தில் இந்த ஸ்கேன் செய்ய 50% சிறப்புக் கட்டணம் வழங்கப்படுகிறது. இந்நோயினை  ரேடியோ பிரீஃவென்சி (Radiofrequency)   முறையில் எளிதாக ஒரே நாளில் சிகிச்சை பெற்று, வீடு திரும்ப முடியும். கேஎம்சிஹெச்  மருத்துவமனையில் உள்ள வெய்ன் கிளினிக்கில், காலை 9 மணிக்கு துவங்கும் இந்த முகாம் , மாலை 3.00 மணி வரை நடக்கிறது. முன்பதிவு செய்ய மொபைல்:7339333485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.