என் வாழ்க்கை சினிமாவுக்கு அர்ப்பணம்

சினிமா என்ற துறை மட்டும் பல மொழிகள் தாண்டி மக்களை ஈர்க்க கூடிய சக்தியாக உள்ளது. மற்ற மொழிகளில் எத்தகைய படங்கள் வந்தாலும் நம் தமிழ் சினிமா மேல் சிலர் மிகப்பெரிய ஆதரவும் பாசமும் வைத்ததிருக்கிறார்கள். எனக்குள் இருக்கும் சினிமாவை நான் வெளியில் கொண்டு வரவேண்டும் என்றால் அதன் மேல் நான் வெறித்தனமான பாசம் வைக்க வேண்டும் என்று நினைத்து மலையாளத்தில் பியூட்டிபுள், மந்திரகன், தமிழில் வெளியாக காத்து கொண்டு இருக்கும் ரிச்சி படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் பயனுர் யை நாங்கள் சந்தித்த போது எங்களிடம் உரையாடிய சில தகவல்களை காண்போம்.

நமஸ்காரம் என் பெயர் ஆனந்த் பயனூர், என் ஊர் பெயர் பயனூர். சினிமா எல்லாத்துக்கும் பிடிக்கும் ஆனால் மற்றவர்களை விட எனக்கு கொஞ்சம் அதிகமா பிடிக்கும்னு சொல்லுவேன். மனிதனா பிறந்த யார இருந்தாலும் நல்லா படித்து நல்ல வேலைக்கு போகணும்னு நினைப்பாங்க. ஆனால் என் பள்ளி நாட்களில் எனக்கு சினிமா மேல் ஒரு தனிப்பட்ட மோகம் வர தொடங்கியது. என் வீட்டுக்கு பக்கத்துல சினிமா திரை அரங்கம் இருக்கும். எல்லா மொழி படங்களும் அந்த திரை அரங்கத்துல போடுவாங்க. நான் சின்ன பையனா இருக்கும்போது சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் போட்டாங்க. அந்த படம் பார்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை வந்து அந்த படத்தை பார்த்தேன்.

அதற்கு பிறகு என் மனதுக்குள் ஒரு விஷயம் தோன்றியது. சினிமா மூலியமாக பல கலாச்சார கதை களத்தை நம்மால் சொல்ல முடியும என்று யோசிக்க தொடங்கினேன். அதற்கு பிறகு சென்னை வந்து பல கஷ்டங்கள் பட்டேன். டிகிரி படிப்பை பாதியில் விட்டு விட்டு, சினிமாவில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் முடிவு பண்ண ஆரம்பித்தேன். அதற்கு பிறகு பல சினிமா கம்பெனிகளில் உதவி புரொடக்சன் மேனேஜராக பணி புரிய ஆரம்பிச்சு, அப்படியே படி படியா தமிழ் படங்கள கேரளாவில் வினயோகஸ்தம் பண்ண தொடங்கினேன், அதற்கு பிறகு புரொடக்சன் கண்ட்ரோலர், எக்ஸிகியூட்டிவ், அப்படியே தயாரிப்பாளராக எனக்கு என் மனதில் தோன்றிய உடன் மலையாளத்தில் படங்கள் தயாரிக்க முடிவு எடுத்துவிட்டேன்.

நான் நினைத்த மாதிரியானா படங்கள் மலையாளத்தில் எடுத்தாலும் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசையாக இருந்துச்சு , அப்போதான் நிவின் பாலி எங்கிட்ட வந்து சொன்னாரு தமிழ்ல படம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க தயாரிக்க முடியுமான்னு எங்கிட்ட கேட்டாரு நான் உடனே ஓகே சொல்லியிட்டேன். அந்த படம்தான் ரிச்சி. படம் நான் நினைச்ச மாதிரியே நல்ல வந்திருக்கு. கண்டிப்பா தமிழ் ரசிகர்களை பூர்த்தி செய்யும் அளவுக்கு கண்டிப்பா இருக்கும் ரிச்சி படம். ரிச்சி படத்துல நிறைய வித்யாசமான கதை களத்தை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.

வெற்றி, பணம் இதை மட்டும் வைத்து நான் படம் பண்ண வேண்டும் என்று நான் சினிமாவுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்ல படங்கள் கொடுக்க வேண்டும்.  இதில் தோல்விகள் இருக்கலாம் ஆனால் அதை நான் எப்போதும் கண்டு கொல்வது இல்லை. என் வாழ்நாள் முழுக்க சினிமாக்காக என்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பது என் மனதில் ஆழமாக எழுதி வைத்து இருக்கிறேன். இளம் சமுதாயம் நல்ல படங்கள் எடுத்து நம் நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மேல் ஓங்கி வைக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதை போல் பலரின் உழைப்பு சினிமாவில் இருக்கின்றது.  அதை நாம் மதிக்க வேண்டும். அதை நாம் புரிந்து கொள்ளாமல் திருட்டு விசிடி, இணைய தளங்களில் பார்ப்பது குற்றம் ஆகும்.

ஒரு திரைப்படம் எடுப்பது மிக பெரிய தவம் என்று நான் எப்போதும் என் நண்பர்களிடம் சொல்வேன். அந்த அழகான கலை துறையைய் காப்பாற்ற வேண்டுவது என் தலையாய கடமை என்பதை இந்த இடத்தில் தெரிவித்து கொள்கிறேன். இந்தியானா பிறந்த அனைவரும் சாதிக்க வேண்டும். அதான் நம் நாட்டுக்கு நம் செய்யும் கடமை. இளம் சமுதாயத்துக்கு நாம் எப்போதும் தோல் கொடுக்க வேண்டும். அவர்கள்தான் நம் நாட்டின் அஸ்திவாரம் என்று சொல்லி கொண்டு விடை பெறுகிறேன் நன்றி வணக்கம். உங்கள் நண்பன் ஆனந்த் பயனுர்.

– பாண்டிய ராஜ்.