R.I.P கிரேசி மோகன்

நகைச்சுவை ஒரு மனிதனுக்கு எந்தவகை நோயையும் தீர்கும் மருந்தாக  இருக்கிறது. அதற்கு ஒரு சிறந்த நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும்,  வசனகர்த்தாவாகவும், ஓவியராகவும் இருபவர் கிரேசி மோகன். இவர் அக்டோபர் 16, 1952ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் மோகன் ரங்காசாரி. இவர் 1972 -ல் கல்லூரி விழாவிற்காக கிரேட் பேங்க் ரோபாரி என்ற நாடகம் எழுதி அதில் நடித்தார். இதற்காக இவர் நடிகர் கமல் மூலம் சிறந்த நடிகர் மற்றும் எழுத்தாளர் விருது பெற்றார். பின்னர் அவருடன் அவருக்கு ஈடுகொடுக்கும் கதாபாத்திரத்தில் வசூல் ராஜா MBBS படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கமலின் வசூல் ராஜா, மைக்கேல் மதன காம ராஜன், பஞ்சதந்திரம், தெனாலி போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் 1976 ல் S.V. சேகர் நாடக குழுவிற்காக கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகம் எழுதினார். இந்த நாடகத்தின் வெற்றிதான் இவரின் பெயராக மாரி நாம் அறியப்படும் கிரேசி மோகன். இவர் 7 தொலைக்காட்சி நாடகங்களை எழுதியுள்ளார். இதுபோக இவர் ஒரு பொறியாளர். கேலியும் கிண்டலும் அவரின் நாக்கின் வழி விளையாடும். இவரின் முதல் சினிமா வருகையை பதிவிட்டது கமலின் அபூர்வ சகோதரர்கள். அதன் பின் கமலின் அடுத்தடுத்த படங்களுக்கு இவர் வசனம் எழுத ஆரம்பித்தார். கமல் நகைச்சுவையிலும் கலக்கியத்திற்கு இவரின் பேனா முனையில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள் தான் ஒரு முக்கிய காரணம். ஒரு காமெடி வசனம் முடிவதற்குள் அடுத்த வசனம் என அடுக்கடுக்காக மல்லிகைப்பூ கோர்வைபோல் சரவெடியாய் இவரின் வசனங்கள் வந்து சேரும். இது தான் இவரின் தனி அடையாளமாக இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டும்  என்றல் ஒரு வசனத்தை வைத்தே இது கிரேசி மோகனின் வசனம் என்று கண்டுபிடித்திட முடியும்.

அதுமட்டுமல்லாமல், இவருக்கும் ஜானகிக்கு ஒரு தொடர்பு உள்ளது. எப்படி என்றால் இவரின் படங்களில் ஜானகி என்ற பெயர் இல்லாமல் இருக்காது. காரணம், இவரின் முன்னாள் காதலியோ அல்லது மனைவியின் பெயரோ இல்லை, இது இவரின் ஆசான் பெயர். ஜானகி இவரது 1ம் வகுப்பு ஆசிரியர். இவர்தான் கிரேசி மோகனின் நாடக மேடையில் நடக்க பழகிவிட்டவர். அதாவது இவரின் கலை ஆர்வத்திற்கு அடித்தளமிட்டவர். அதனால் தான்  இவரின் படங்களில் ஜானகி என்ற பெயர் கண்டிப்பாக இருக்கும் அது கமல் ரஜினி படமாக இருந்தாலும் இந்தப்பெயர் இருக்கும். ஜானகி என்ற பெயர் வேண்டாம் என்று கூறினால் அந்த படத்திற்கு வசனமே எழுதமாட்டார்.

இவரின் படம் எத்தனை முறை பார்த்தாலும் அது திரும்ப திரும்ப சலிக்காமல், சிரிக்க வைக்கும் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை. அதுமட்டுமல்லாமல் இவரை போன்ற இரட்டை அர்த்தம் கொண்ட வசனம் இல்லாமல் இன்றைய ரசிகர்களை சிரிக்கவைப்பது என்பது இவரால் மட்டுமே முடியும். இவரை போன்ற ஒரு எழுத்தாளர் இன்றைய சினிமாவில் இல்லை என்பது மிகவும் கவலைக்குரியது. அப்படிபட்ட ஒரு கலைஞன் இன்று  சென்னையில் தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.  இவரின் மறைவை அறிந்து கண்ணீர் வடிக்கும் பலகோடி ரசிகர்களில் நாமும் ஒருவர்.