சிஎம்சி இன்டர்நேஷனல் கலை விழா

கோவை தீத்திபாளையத்தில் அமைந்துள்ள சிஎம்சி இன்டர்நேஷனல் பள்ளியில் ‘சினோஸ்சுவர் 2019 என்ற பெயரில் பள்ளிக்கு இடையேயான மாணவர் கலை விழா அண்மையில் நடைபெற்றது. இக்கலை விழாவில் கோவை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 250 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். இக்கலை விழாவிற்கு சிஎம்சி கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஐ.நாதன் அவர்கள் தலைமை வகித்தார். சிஎம்சி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாகி லீமா ரோஸ் நாதன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சரவணா கீதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

விழாவிற்கு தலைமை விருந்தினராக தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் அவர்களும் சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) சரவணன் அவர்களும் விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத் அவர்களும் கலந்து கொண்டனர்.

இக்கலை விழாவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.