மாணவிகளிடம் கைத்தறி ஆடை விழிப்புணர்வு!

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயிலும்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனயியல் மற்றும் பல்வேறு துறை மாணவிகளிடம் கைத்தறி ஆடை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதற்காக அத்துறை மாணவிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி கைத்தறி நிறுவனத்தில் ஆடை வாங்கி அணிந்து கல்லூரிக்கு வந்தனர். நலிந்துகிடக்கும் கைத்திறி தொழிலை மேம்படுத்த ஆண்டுக்கு 10 கைத்தறி உடைகளை வாங்க வேண்டும். இதன்மூலம்  கைத்தறி தொழிலில் ஈடுபட்டுவரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மை அடைவார்கள் எனவும், நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும் எனவும் இளைய சமுதாயத்தினர், இவ்வகை கலாச்சாரத்தினை காப்பதோடும், இனி கைத்தறி ஆடை அணிவது, நமது உரிமை எனவும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என இத்துறையின் முதல்வர் கேட்டுக்கொண்டார்.