உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு

கோவை மேட்டுபாளையத்தை அடுத்துள்ள கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவியர் உலக சுற்றுச் சூழல் தினம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் சுற்றுச் சூழலைக் காப்போம் ‘பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பூமியைக் காப்போம்’ மரம் வளர்ப்போம், வளம் சேர்ப்போம்’ போன்ற பதாகைகளை ஏந்தியபடி பிளாக் தண்டர் வரையிலும் ஊர்வலமாகச் சென்றதோடு, சாலையோரம் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தித் தூய்மைப்படுத்தினர்.

உலக சுற்றுச் சூழல் தூய்மை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் உதகையிலிருந்து வாகனங்களில் வந்தவர்களுக்கு பள்ளி சார்பில் மரக் கன்றுகள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், பள்ளி செயலர் கவிஞர் கவிதாசன், பள்ளித் துணைச் செயலர் ஞானபண்டிதன், முதுநிலை முதல்வர் வெ.கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.