இரண்டு இதயங்களுடன் வாழும் நபர் !!! KMCH புதிய சாதனை !!!!

இந்த புதுமையான இருதயம் மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் பிரஷாத் வைஜயநாத், இயக்குனர் கே.எம்.சி.எச் இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் தாமஸ் அலெக்ஸ்சாண்டர், டாக்டர் சுரேஷ்குமார், மற்றும் டாக்டர் விவேக் பதக் குழு வெற்றிகரமாக செய்து சாதனை புரிந்திருக்கிறார்கள்.

கே.எம்.சி.எச் மருத்துவமனை அனைத்து நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் சிறந்து விளங்குகிறது. இதன் தொடர்ச்சியாக  ஆசியாவிலேயே முதல் முறையாக இருதய துடிப்புடன் ஹெட்ரோடோபிக் (Heterotopic) இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது.

பொதுவாக இருதய செயலிழப்பு நோய் ஏற்பட்டால் மூன்று வகையில் குணப்படுத்தமுடியும்.

  • இருதய மாற்று அறுவை சிகிச்சை
  • நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை
  • செயற்கை இருதய மாற்று அறுவை சிகிச்சை

ஆனால்  கே.எம்.சி.எச் மருத்துவமனையில் மட்டும் தான் முதல் முறையாக இருதய துடிப்புடன் ஹெட்ரோடோபிக் (Heterotopic)  இருதய மாற்று அறுவை சிகிச்சை மே மாதம் 30ம் தேதி 2017 செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அந்த நபருக்கு பொருத்தப்பட்ட இரண்டு இருதயங்களில் ஒன்று ஒரு பெண்ணுடையது. இந்த அரிய இருதய மாற்று அறுவை சிகிச்சையானது இருதய தமனி குழாய்களை நேரடியாக இணைக்கும் மருத்துவ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நோயாளியின் இருதயம் இயங்கிக் கொண்டிருக்கும்போதே செய்யப்பட்டது.

45 வயதுள்ள விக்னேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு நுரையீரல் பகுதியில் உயர்ந்த அழுத்தம் இருந்த காரணத்தால் அவருக்கு இந்த புதுமையான ஹெட்ரோடோபிக் (இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இரு இதயங்களுடன் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி டாக்டர் பிரஷாத் வைஜயநாத் (Heterotopic) அறுவை சிகிச்சை நிபுணர், கே.எம்.சி.எச்) கூறுகையில், நோயாளியின் இதயத்தில் 10% இடம் தான் அறுவை சிகிச்சை செய்ய ஏற்றதாய் இருந்தது. அதிர்ஷ்டவசமாக மூளைச் சாவடைந்த பெண்ணின் இருதயம் அவருக்கு தானமாக கிடைக்கப்பெற்றது. அந்த இதயம் சிறியதாக இருந்ததால் அந்த இடத்திற்கு கட்சிதமாக பொருந்தியது.

இந்த அறுவைசிகிச்சையில் குறிப்பிடத்தக்க மரபு வழியான வசீகரமான அம்சம் என்னவென்றால் எல்லா ஆண்களுக்கும் உள்ளது போல xy குரோமோசோம் மட்டும் அல்லாமல் ஒரு பெண்ணின் xx குரோமோசோமும் அந்த நோயாளியின் உள்ளே இருக்கும் என்று கூறினார்.

இரண்டு இருதயங்களும் இயங்குவது பற்றி விளக்கமாக எடுத்துக் கூறிய மருத்துவர் இரண்டு இருதயங்களுக்கிடையே ஐந்து இணைப்புகள் உள்ளதாக கூறினார்.

இரண்டு ரத்த நாளங்கள் சுத்தமான ரத்தத்தை எடுத்து செல்கின்றன. மற்ற மூன்று நாளங்கள் அசுத்த ரத்தத்தை வெளியேற்றுகின்றன. இரண்டு நாளங்களும் இரண்டு இருதயங்களும் சுத்த ரத்தத்தை பகிர்ந்து கொள்வதை உறுதி செய்கின்றன. வலது பகுதியில் மேல்பெருஞ்சுவரை, கீழ் பெருஞ்சுவரை மற்றும் இதய தமனி என்ற மூன்று இணைப்புகள் உள்ளன. இவைகளை இணைப்பது கடுமையான வேலைமட்டுமின்றி பெரும் சவாலாகவும் இருந்தது என்று டாக்டர் பிரஷாத் வைஜயநாத் கூறினார்.

பொதுவாக வெளிநாடுகளில் உள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள் செயற்கை இணைப்பான்களின் உதவியை கொண்டு இரண்டு இருதயங்களில் உள்ள தமனிகளை இணைக்கின்றனர் ஆனால் இந்த நோயாளிக்கு நேரடியாக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவரின் உடல் எடை, இரத்த வகை மற்றும் வயது ஆகியவை இருதய தானம் செய்பவருடன் ஒப்பிடுகையில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் . இது போன்ற அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு முன்பு இந்த விவரங்களை நாங்கள் ஒப்பிட்டு அலசிய பிறகே சிகிச்சையை செய்வோம் என்று கூறினார்.

உலகில் நான்கே மையங்களில் இது போன்ற இருதய மாற்று அறுவைசிகிச்சைகளை  செய்வதற்கான அறுவை சிகிச்சை நிபுணர்களும் மற்றும் நவீன மருத்துவ கருவிகளும் இருப்பதாக கூறிய டாக்டர் பிரசாத் வைஜயநாத், ஆசியாவில் முதல் முறையாக கே.எம்.சி.எச் மருத்துவமனையில் இந்த புதுமையான இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த அறுவை சிகிச்சை பற்றிய ஒரு கட்டுரை சர்வதேச இருதயம் மாற்று இருதய அறுவை சிகிச்சை இதழில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த அரிய சிக்கலான சவால் மிகுந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவர்களை பாராட்டிய ரிவிசிபி மருத்துவமனையின் தலைவர் டாக்டர். நல்ல G. பழனிசாமி கூறுகையில் கோவை மருத்துவ மையம் & மருத்துவமனையும் தற்போது அதி நவீனமான அறுவை சிகிச்சை தொழில் நுட்பங்களையும் புதுமைகளையும் பின்பற்றி வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.