குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

கோவை உக்கடம் பகுதியில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.94.42 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 1840 வீடுகள் மற்றும் திரு.வி.க. நகர் திட்டப்பகுதியில், 256 வீடுகள் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகளுடன் அனைவருக்கும் ரூ.20.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இந்த வீடுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகர ஆணையாளர் விஜயகார்த்திகேயன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.