திராவிட மாடல் அரசின் சாதனைகள் விளக்கப்‌ பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப்‌ பொதுக்கூட்டம் ராஜவீதி தேர்நிலைத் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை வகித்தார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்பி., பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர், வட்டக்கழக‌ நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.