இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் எஃபிசைக்கிள் 2024 போட்டியில் வெற்றி

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், SAE ISS எஃபிசைக்கிள் 2024 போட்டியில் அட்வான்ஸ்டு மற்றும் குவாட் எலக்ட்ரிக் வாகனங்கள் என்ற இரண்டு பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரு புதுமையான எலக்ட்ரிக்-பெடல் ஹைப்ரிட் டூ சீட்டர் வாகனத்தை உருவாக்கியதில் இருந்து முதல் பாராட்டு கிடைத்தது. இது ஒட்டுமொத்த டைனமிக் முதல் நிலை, சிறந்த வணிகத் திட்டம், சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் மதிப்புமிக்க ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் உட்பட பல விருதுகளைப் பெற்றது. இந்நிகழ்வில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நமது கல்லூரி தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வாகனம் மாணவர்களின் சமூக அர்ப்பணிப்புத் திறனுக்கு சான்றாக உள்ளது. இது மனிதனால் இயங்கும் மிதிவண்டியுடன் மின்சார உந்துவிசை தொழில்நுட்பத்தை தடையின்றி ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் மற்றொரு குழு மாணவர்கள் ‘மஹிந்திரா தார்’ அமைப்பின் குவாட் வகை மின்சார ஒற்றை இருக்கை வாகனத்தை வடிவமைத்து வெற்றி பெற்றது. ஒட்டுமொத்த டைனமிக் முதல் நிலை மற்றும் விரும்பப்படும் ஒட்டுமொத்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்பை வென்றது.
இந்த மாபெரும் நிகழ்வின் இணை அமைப்பாளரான ‘மாருதி சுஸுகி’ நிறுவனம் மாணவர்களில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்தனர். அவர்களின் நிறுவனத்தில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியது. இரண்டு திட்டங்களையும் பேராசிரியர் ஒய். ராஸ் மேத்யூ மேற்பார்வையிட்டார்.

மாணவர்களின் இந்த வெற்றிகள் அவர்களுக்க்குக் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் சவால்களை சமாளிக்கும் திறன் ஆகியவற்றின் உருவாக்கும் என்று வலியுறுத்தினார். புதுமை உருவாக்கவியலின் புல முதன்மையர் கே.சிவா ‘மாணவர்கள் தேசிய அளவில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வாகனத் துறையில் புதுமைக்கான புதிய தரத்தை வடிவமைத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.

இரண்டு வாகனங்களையும் தயாரிப்பதில் மாணவர்களுக்குக் கல்லூரி நிர்வாகம் நிதி உதவி வழங்கியது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் சரசுவதி, நிர்வாக அறங்காவலரும் செயலாளருமான பிரியா, முதன்மை நிர்வாக அலுவலர் கருணாகரன், முதல்வர் ஜெயா மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களையும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.