கொங்குநாடு கல்லூரியில் 16வது பட்டமளிப்பு விழா

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் இயக்குனர் மற்றும் செயலர் சி.ஏ.வாசுகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கொல்கத்தாவின் இந்திய விலங்கியல் ஆய்வின் இயக்குனர் த்ரிதி பானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் லக்ஷ்மணசாமி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.