பாரதியார் பல்கலை வளாகத்தில் ஆராய்ச்சி மையம் துவக்கம்

கோவை பாரதியார் பல்கலைகழக வளாகத்தில், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் புதிய அலுவலகத்தை துணைவேந்தர் காளிராஜ் துவக்கி வைத்தார்.

இது குறித்து துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், “பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட, பல சிறப்பு ஆய்வு திட்டங்கள் வாயிலாக, ஆண்டுக்கு, 25 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இந்த நிதியை உரிய நேரத்தில் விரைவாக பயன்படுத்தி ஆய்வுகளை நிறைவு செய்ய, இம்மையம் பேருதவியாக இருக்கும். ஆலோசனைகள் வழங்குதல் முதல், ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தல் வரையிலான பணிகள் அனைத்தையும், விரைவாக முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இம்மையம மேற்கொள்ளும் ‘ என்றார்.

இந்த ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், துவக்க விழாவில் பதிவாளர் முருகன் மற்றும் மையத்தின் இயக்குநர் பல்கலை உயிர் தகவலியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெயக்குமார் உடன் இருந்தார்கள்.